மொத்தமே குளறுபடி! ஏ.ஆர் ரகுமானின் "மறக்கமா நெஞ்சம்" விவகாரம்! தமிழ்நாடு டிஜிபி-யின் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி சென்னை அடுத்த பனையூரில் நடைபெற இருந்த நிலையில் அப்போது சென்னையில் கன மழை பெய்ததால் கடைசி நேரத்தில் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

மேலும் மாற்று தேதி அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் தேதி அறிவிக்கப்பட்டு கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. சுமார் 2,000 முதல் 15,000 ரூபாய் வரை நிகழ்ச்சியை காண பொதுமக்கள் டிக்கெட் வாங்கி இருந்தனர்.

அறிவித்தபடி நேற்று மாலை நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் ஏ.ஆர் ரகுமானின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எந்தவித வசதியும் சரிவர செய்யவில்லை எனவும், பார்க்கிங், சேர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு ஒரே நேரத்தில் ரசிகர்கள் குவிந்ததால் சென்னை முழுவதும் நேற்று போக்குவரத்து சந்தித்தது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 

இந்த போக்குவரத்து நெரிசலில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாகனமும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் வாகனம் திசையில் உள்ள சாலை வழியாக மெதுவாக ஊர்ந்து சென்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி முதலமைச்சருக்கே இந்த நிலையா!? என இணையதள வாசிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். ஏ.ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு விஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN DGP ordered to investigate in Marakkuma Nenjam program issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->