#BREAKING : கீழடி அருங்காட்சியகம் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாய்வு பணியில் தமிழ் பிராமி எழுத்துக்கள், குறியீடுகள் பொறித்த பானை, ஓடுகள், கல் மணிகள், வெள்ளி முத்திரை காசுகள், கங்கை நகரத்துடன் தொடர்புடைய கருப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உருக்கு உரைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. கொந்தகையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

இவை அனைத்தும் கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்பது கார்பன் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருட்களை மக்களும் மாணவர்களும் காணும் வகையில் அருங்காட்சியம் அமைக்க தமிழ்நாடு தொல்லியல் துறை முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் ரூ.18.2 கோடி செலவில் பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.  காட்சி கூடங்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM MK Stalin today opned keezhadi musuesum


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->