சட்டப்பேரவையில் கொந்தளித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடங்கியதும் அமளி, வெளிநடப்பு! - Seithipunal
Seithipunal


காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் பதில் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாகவும், ஓபிஎஸ் இருக்கை விவகாரம் தொடர்பாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளிகையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதற்கு முன்னதாக சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொரடா எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், கேபி முனுசாமி உள்ளிட்டார் சந்தித்து, எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக வலியுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையில், "இந்த அரசு மீது அவதூறுகளை வீசினாலும், மக்களை யாராலும் வெல்ல முடியாது. மக்களின் மனங்களை மாற்ற முடியாது. 

இலவச மின்சாரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது. திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இந்த அரசு திகழ்கிறது. மொழி உரிமை, இன உரிமை என்பது சாசனமாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது" என்று முக ஸ்டாலின் பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly CM Stalin Speech ADMK MLAs out 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->