ஒரு துடைப்பம் ₹ 440க்கு கொள்முதல்.. மக்கள் வரிப்பணத்தை ஏப்பம் விட்ட திருப்பூர் மாநகராட்சி..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு 37 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். மேலும் 2 சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அணிமாறிய அதிமுக கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 40 பேர் ஆதரவுடன் மேயர் வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

திராவிட முன்னேற்றக் கழகம் தனி பெரும்பான்மையுடன் உள்ள திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்ட துடைப்பம் ஒன்று 440 ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. 

திருப்பூர் மாநகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயன்படுத்தும் கைப்பிடியுடன் கூடிய 800 துடைப்பம் 440 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை சாதாரண கடைகளிலே 100 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் நிலையில் 440 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒரு சாதாரண துடைப்பம் 40 ரூபாய் என உள்ள நிலையில் அதில் பொருத்தப்படும் கைப்பிடி உள்ளிட்டவற்றை உள்ளடக்கி 140 ரூபாய்க்கு என விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டிருந்தாலும் அது அதிகபட்ச விலையாகவே இருந்திருக்கும். ஆனால் திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஒரு துடைப்பம் 440 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது வேதனை அளித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் விலையை உயர்த்தி கொள்முதல் செய்யப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Corporation purchased a broom for rs440


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->