விதிகளை மீறி வைக்கபடும் பேனர்கள் வாகன ஓட்டிகள் அவதி..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாலைகளில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அனுமதியின்றி வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. அதனால் நீதிமன்றம் பல்வேறு கட்டுபாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளையும் விதித்துள்ளது. இதனால் பேனர்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் போக்குவரத்து இடையூறுகள் பெருமளவில் குறைந்திருந்தது.

ஆனால் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பெரிய டிஜிட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனர் அமைப்பதில் அனைத்து வணிக நிறுவனங்களும் பாகுபாடின்றி ஈடுபடுகின்றன.  இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகள் ஏற்படுகின்றன. 

இதனால் அந்த பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீதும் கண்டு கொள்ளாத அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Locality Peoples Struggle about Banner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->