நாலுக்கு ஒன்பது ஆம்புலன்சில் மாஸ்க் போடாத நபர்களுக்கு மரண பயம் காட்டிய காவல்துறை.. வைரலாகும் கலக்கல் விழிப்புணர்வு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவ துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தன்னார்வலர்களும், அரசும், மக்கள் நேசிக்கும் பல நட்சத்திரங்களும் தொடர்ந்து தங்களுக்கு தெரிந்த வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் சுட்டெரிக்கும் வெயிலையும் கண்டுகொள்ளாது பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவில் வெளியே அனாவசியமாக சுற்றுவது மற்றும் பாதுகாப்பு நடைமுறையாக முகக்கவசம் அணியாமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணையத்தில் காவல் துறையினர் தங்களின் முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனாவால் 1,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 110 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில், முதல் மூன்றாவது மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருக்கிறது. இங்கு போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டக்காவல் துறை சார்பாக கரோனா விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை மடக்கிய காவல் துறையினர், முன்னதாகவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டு இருந்த அவசர ஊர்தியில் அவர்களை ஏற்றியுள்ளனர். உள்ளே அமர்ந்திருந்த நபருக்கு கொரோனா உள்ளது என்று கூறியதும் மூன்று வாலிபர்களும் உயிருக்கு அலறியடித்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

மேலும், இது அனைத்தும் காவல் துறையினர் மக்கள் முகக்கவசத்தின் அத்தியாவசியம் மற்றும் அனாவசியமான வெளியே வருவதை குறைக்கும் பொருட்டு திட்டம் தீட்டி விழ்ப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சியில் கொரோனா நோயாளியாக நடித்தவர் தன்னார்வமாக விழிப்புனர்வு ஏற்படுத்தும் பொருட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur district police curfew video awareness about mask


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->