திமுக துரோகிகள் லிஸ்டில் வைகோ?.. அமைச்சரின் எச்சரிக்கை பேச்சால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கழகத்திற்கு துரோகம் செய்பவர்கள் எவ்வுளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், துரைமுருகன் நினைத்தால் 24 மணிநேரத்தில் கட்டம் கட்டிடுவேன் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலசோனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். 

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், " அதிமுக தோல்வியடைந்த காரணத்தால் வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் நிற்க அவர்களுக்கு தைரியம் வராது. தற்போது, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். தேர்தல் நிறைவுபெற்ற 3 நாட்களில் கூட்டுறவு சங்கம், சர்க்கரை ஆலை மற்றும் ஆவின் சங்கம் கலைக்கப்படும்.

தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்ற வாய்ப்புகள் வழங்கப்படும். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால் வாங்கிக்கொள்வோம். எங்களை அடிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கட்சிக்கு துரோகம் செய்ய நினைத்தால் அவ்வுளவுதான். 

இன்னும் எத்தனை வருடங்கள் துரோகிகளை பார்த்துக்கொண்டே இருப்பது. அண்ணா அவர்களின் காலத்தில் சம்பத், எம்.ஜி.ஆர்., கோபால் சாமி என தொடர்ந்து கொண்டே செல்கிறது. இனியும் அப்படி நடக்க கூடாது. அதனை பார்த்துக்கொண்டும் இருக்கமாட்டோம். 

அனைவரும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். நமக்கு தெரியாத தேர்தல் யுக்திகள் கிடையாது. மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் மூலம் பட்டியல்கள் கிடைத்த பின்னர், தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும் " என்று தெரிவித்தார். 

துரோகிகள் குறித்து அமைச்சர் பேசுகையில் வை. கோபாலசாமி என்ற வைகோவை பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில், வைகோவுக்கு இந்த விஷயம் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur Jolarpet DMK Minister DuraiMurugan Speech about Vaiko 29 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->