அரசு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை! 3 பேர் மீது வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக கவுதமன் (வயது 55) என்பவர் பணியாற்றி வருகிறார். 

மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, இவர் ஒப்பந்ததாரர்களிடம் அதிக பணம் கேட்பதாக தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது உதவி பொறியாளர், இளநிலை வரைவு அலுவலர், கார் ஓட்டுநர் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.95 ஆயிரம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 

நேற்று இரவு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் உதவி செயற்பொறியாளர் கவுதமன் தங்கியிருந்த விடுதியிலும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 60,000 பணத்தை பறிமுதல் செய்தனர். 

இதனை அடுத்து கவுதமன் உள்பட 3 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Govt official room Anti corruption police raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->