டிக் டாக் வேண்டாம் என கணவன் கண்டிப்பு! தோழியுடன் ஓட்டம்பிடித்த புதுமணப்பெண்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் சானாவூரணியை சேர்ந்த ஆரோக்கியலியோவிற்கும், தேவக்கோட்டையைச் சேர்ந்த வனிதாவுக்கும், கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த சில மாதங்கள் தனியாக குடித்தனம் இருவரும் நடத்தி வந்தனர். பின் ஆரோக்கியலியோ வேலைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டார். 

இதற்கு பிறகு வீட்டில் தனியாக இருந்த வந்த வனிதா டிக் டாக் வீடியோவை பொழுதுபோக்காக பயன்படுத்தியுள்ளார். இதனைத்தொடர்ந்து டிக் டாக் மூலமாக திருவாரூரை சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் வனிதாவுக்கு நட்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து வனிதாவும், அபியும் இருவரும் சேர்ந்து டிக் டாக் வீடியோவில் வருவதை கண்ட வனிதாவின் கணவன் ஆரோக்கியலியோ, டிக் டாக் வீடியோ எல்லாம் வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் ஆரோக்கியலியோ சிங்கப்பூரில் இருந்து செலவுக்காக தன் மனைவிக்காக  அனுப்பிய பணத்தையும் தனது தோழியுடன்  வனிதா செலவழித்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. 

தான் எவ்வளவோ டிக் டாக் வேண்டாம் என சொல்லியும் வனிதா கண்டுகொள்ளவில்லை, இதனால் கடந்த வாரம் சிங்கப்பூரிலிருந்து ஆரோக்கியலிலோ சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்பவும் தான் சொன்னதை மனைவி கேட்கவில்லை என்றதும், வனிதாவை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று அறிவுரை சொல்லுமாறு கூறியுள்ளார்.
 
இதையடுத்து வனிதாவுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புத்திமதி கூறியுள்ளனர். இந்தநிலையில் தாய் வீட்டிற்கு சென்ற வனிதா, தனது சகோதரியின் 25 சவரன் நகைள், தனது நகைகள் என மொத்தம் 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு திடீரென மாயமானார்.
 
இந்த தொடர்பாக திருவேகம்பத்தூர் காவல்நிலையத்தில் தனது மகள் வனிதாவை காணவில்லை என அவரது தாய் அருள் ஜெயராணி புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகள் வனிதாவுடன், அவரது தோழி அபி டிக் டாக் செய்த வீடியோவையும் காவல்துறையிடம் அளித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiktok issue in sivakangai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->