மூன்று நாள் ஜெபம் செய்தும் உயிர்த்தெழாத பெண்! போலீசில் போட்டுக் கொடுத்த குடியிருப்பு வாசிகள்! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் எஸ்.எஸ்.காலனி அடுத்த ஜானகி நாராயணன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவருடன் மனைவி மாலதி மற்றும் இரு மகன்கள் வசிக்கின்றனர். பாலகிருஷ்ணன் தனியார் உணவகத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரின் முதல் மகன் ஜெய்சங்கர் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில், இரண்டாவது மகன் சிவசங்கர் மருத்துவம் படித்து வருகிறார். 

இவர்கள் அனைவரும் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் மாலதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் இருந்து மாலதியின் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் வீட்டில் குளிர்சாதன பெட்டியில் வைத்து ஜெபம் செய்து வந்துள்ளனர். 

மாலதியின் உடலை அடக்கம் செய்யாமல் வீட்டிலயே வைத்திருந்ததை பார்த்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் உறவினர்கள் சிலர் வர காலதாம் ஆகுவதாக தெரிவித்தனர். மூன்றாவது நாளாக உடலை அடக்கம் செய்யாமல் வைத்திருந்ததால் மீண்டும் காவல்துறையினர் கேட்டதற்கு பாலகிருஷ்ணன் தகராறு செய்துள்ளார். அதன் பின்னர் உறவினர்களை தொடர்பு கொண்டு பேசி வரவழைத்து சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிற்கு மாலதியின் உடலை அனுப்பி வைத்துள்ளனர்.

 இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறுகையில் "பாலகிருஷ்ணன், மாலதி தம்பதியினர் இரு மகன்களுடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். அதன்படி உயிர்த்தெழுதல் பிரார்த்தனையின் மூலமாக இறந்து போனவரை உயிர்ப்பிக்க முடியும் என்ற மூட நம்பிக்கையில் அவரது உடலை வீட்டிலேயே வைத்து ஜெபம் செய்துள்ளனர்" என காவல்துறையை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

threedays resurrection chant the woman dead body


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->