மது விருந்தால் வந்த வினை - ஓடை வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்கள்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தோப்பில் மது விருந்து நடந்துள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக செண்பகதோப்பு ஓடையை கடந்து மூன்று வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று மது அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக செண்பகத்தோப்பு ஓடையில் திடீரென அதிக அளவு தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இதைப்பார்த்த வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றால் ஓடையை கடந்து விடலாம் என்று எண்ணி ஓடைக்குள் சென்றுள்ளனர்.

ஆனால், அதிக நீர்வரத்து மற்றும் போதையில் இருந்ததால் மூன்று வாலிபர்களும் நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் மட்டும் சுதாரித்துக் கொண்டு நீந்தி கரையேறினார். மற்ற இருவரும் வெள்ளத்தில் சிக்கி பல மணி நேரம் தண்ணீரிலேயே அங்கிருந்த கோரைப் புல்லை பிடித்து கொண்டு தத்தளித்தனர். 

இதையடுத்து அதிகாலையில் அந்த வழியாக சென்றவர்கள் இளைஞர்களை பார்த்த உடன் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயிறு கட்டி தண்ணீரில் சிக்கியவர்களை மீட்டனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டவர்கள் ராஜபாளையம் குப்புசாமி ராஜா தெருவை சேர்ந்த வெங்கட்குமார், பி.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இந்திய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three youths caught floods in rajapalaiyam


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->