5 கண்மாய்கள், 10 வருடமாக மாயமான சோகம்.. 5 ஆட்சியர், 10 தாசில்தார் மாறியும் பலனில்லை.. தூத்துக்குடியில் வேதனை.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் வேம்பார் ஊரில் 5 கண்மாய்களை காணவில்லை என்று பரபரப்பு புகார் எழுந்துள்ளது. மேலும், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய்கள், கடந்த பத்து வருடங்களாக காணவில்லை என்றும் தெரியவருகிறது. 

இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், சட்டப் போராட்டத்தை கையில் எடுத்த நிலையில், ஐந்து ஆட்சியர்கள் மற்றும் 10 தாசில்தார்கள் பணியிடம் மாறியதுதான் இலாபம். கண்மாயை இன்று வரை கண்டுபிடிக்கவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார். 

ஆக்கிரமிப்பு பகுதிகள் அனைத்தும் உப்பளமாக மாறிவிட்டது என்றும், இதனால் 40 கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கும் சூழலில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கண்மாயை காணும் என்ற புகாரின் பெயரில் பல கதவுகளை திட்டியும், இன்னும் ஒரு கதவுகள் கூட திறக்கப்படாமல் இருக்கிறது என்றும், அரசு விரைந்து களமிறங்கி இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Vembar Vilathikulam Village 5 Pond Missing last 10 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->