எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால், படகு உரிமம் ரத்து - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நான்கு முறைக்கு மேல் எல்லை தாண்டிச் சென்றால் படகு உரிமம் ரத்து செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கிறார்கள் என்று கூறி, இலங்கை கடற்படையினர் அரங்கேற்றிய அட்டூழியங்கள் இன்றளவிலும் மறக்க இயலாதது. படகை சேதப்படுத்துவதும், மீனவர்களை அடித்து அச்சுறுத்துவதும், வலைகளை சேதப்படுத்துவதும் என தொடர் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. 

சில நேரங்களில் தமிழகத்தை சார்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக குற்றசாட்டை முன்வைத்து, அவர்களை கைது செய்து அங்குள்ள சிறையிலும் அடைத்து வருகின்றனர். இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்து, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிருக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும் என மக்கள் மத்திய - மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்லக்கூடாது. எல்லைதாண்டி மீன் பிடிக்கச் சென்றால் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் படகின் உரிமம் ரத்து செய்யப்படும் " என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi District Collector Warn Thoothukudi Fisherman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->