பால் மட்டுமே குடித்து உயிர் வாழும் 19 வயது வரை உயிர்வாழும் இளைஞர்.. கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்தாநல்லூர் லட்சுமாங்குடி மேலத்தெரு பகுதியை சார்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கச்செல்வி. இவர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் பாக்கியலட்சுமி என்ற 27 வயது மகளும், கயல்விழி என்ற 23 வயது மகளும், கன்னிகா என்ற 11 வயது மகளும், கலையரசன் (வயது 19) மற்றும் கலைவாணன் (வயது 17) என்ற மகனும் உள்ளனர். 

19 வயது கலையரசன் பிறக்கும் போதே மூக்கு மற்றும் உதடு பகுதி மூடியபடியே பிறந்துள்ளார். மேலும், இவர் சிரமத்துடன் சிறுவயதில் தாய்ப்பால் குடித்து வளர்த்துள்ளார். இவரால் ஓரளவு மட்டுமே பேச இயலும் என்ற நிலையில், கண்ணனின் மனைவியும் இறந்துவிட்டதால், தனது மகனை மிகவும் சிரமப்பட்டு கண்ணன் பார்த்துக்கொண்டு வருகிறார்.

கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக சேலத்தில் இருக்கும் மருத்துவமனையில் மூக்கு மற்றும் உதடு பகுதிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், கலையரசன் மெல்ல மெல்ல பேச துவங்கியுள்ளார். தற்போது எந்த கேள்வி கேட்டாலும் அழகாக பதில் சொல்லும் சூழலில், வீட்டிற்கு வரும் நபர்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதையை செலுத்தி வரவேற்கும் நிகழ்வும் நடந்து வருகிறது.

கலையரசன் பிறந்ததில் இருந்து இட்லி, தோசை, சாப்பாடு என்று எந்த உணவையும் சாப்பிடாமல் இருக்கும் நிலையில், உள்நாக்கு மூடியுள்ள காரணத்தால் பால் பவுடர் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார். மேலும், நாளொன்றுக்கு ஆறு முறை பால் பவுடர் குடித்து உயிர் வாழும் நிலையில், தற்போது வரை எந்த விதமான உடல்நலக்குறைவான காய்ச்சல் போன்ற எந்த வியாதியும் வந்ததில்லை என்றும், ஒரு முறை கூட ஊசியே போடவில்லை என்றும் கண்ணன் தெரிவிக்கிறார்.

தற்போது அவருக்கு 17 வயதாகும் நிலையில், மகனின் எதிர்காலம் காத்திருப்பதால் குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும், கலையரசனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அரசு தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்றும் கலையரசனின் தந்தை மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur youngster drink milk only and live 19 Years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->