யோகாவில் அசத்தி பதக்கங்களை குவித்த திருவாரூர் சகோதர - சகோதரிகள்..! அரசுக்கு உதவிக்காக கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் வில்லனம்படுகை கிராமத்தை சார்ந்தவர் கண்ணன். இவர் மின்வாரியத்தில் மின் கணக்கீட்டு ஆய்வாளராக இருந்து வரும் நிலையில், இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி இருக்கிறார். 

இவர்கள் இருவருக்கும் தர்ஷினி என்ற 13 வயது மகளுக்கும், ஹரிணி என்ற 11 வயது மகளும், ரித்தீஷ் என்ற 7 வயது மகனும் இருக்கின்றனர். தர்ஷினி 9 ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், ஹரிணி 7 ஆம் வகுப்பும், ரித்தீஷ் 3 ஆம் வகுப்பும் பயின்று வருகிறார். 

கண்ணன் இயல்பாக விளையாட்டுத்துறையில் ஆர்வமாக இருந்து வந்த நிலையில், தேசிய அளவில் 3 முறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டுள்ளார். மேலும், அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் கபாடி போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ள நிலையில், மாநில கபடி போட்டியில் பரிசு பெற்றுள்ளார். 

ஓட்ட பந்தயத்திற்காக கண்ணன் தொடர்ச்சி பயிற்சியெடுத்து வந்த சூழ்நிலையில், கால் முட்டியில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி யோகாசனத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் கால் வலி குறைந்துள்ளது. 

இதனையடுத்து, யோகா பயிற்சியாளர் சண்முகம் என்பவரின் மூலமாக யோகாவை கற்றுக்கொண்ட நிலையில், தனது மனைவி கஸ்தூரி, மகள்கள் மற்றும் மகனையும் யோகா கற்க வைத்துள்ளார். மூத்த மகள் தர்ஷினி சர்வதேச அளவில் 3 பதக்கங்கள் பெற்றுள்ள நிலையில், தேசிய அளவில் 11 பதக்கங்கள் உட்பட மொத்தமாக 110 பதக்கங்களை பெற்றுள்ளார். 

ஹரிணி சர்வதேச அளவில் ஒரு பதக்கமும், தேசிய அளவில் 5 பதக்கமும் என 62 பதக்கங்கள் பெற்றுள்ளார். ரித்தீஷ் தேசிய அளவில் 4 பதக்கங்கள் என 20 பதக்கங்கள் பெற்றுள்ளார். யோகாவில் பதக்கங்களை குவித்து வரும் சகோதர-சகோதரிகள் மேலும் பல சாதனையை புரிய திட்டமிட்டுள்ளனர்.

இவ்வுளவு பதக்கங்கள் வாங்கி வைத்திருந்தாலும், யோகா செய்ய முறையான பயிற்சி உடைகள் மற்றும் தரைவிரிப்புகள் போன்றவற்றை வாங்க இயலாமல் சிரமப்பட்டு வருகின்றனர். தரையிலேயே யோகா பழகி பல பதக்கங்களை வென்றுள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக கண்ணன் தெரிவிக்கையில், " யோகா என்பது சிறந்த காலை. இது நோயை தீர்க்கும். யோகாவின் மகத்துவம் அனைவருக்கும் தெரிய வேண்டிய விஷயம். எதிர்காலத்தில் தர்ஷினி, ஹரிணி, ரித்தீஷ் ஆகியோர் யோகா மருத்துவம் பயின்று, இந்தியா முழுவதும் யோகா கலையை பரவ செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். இதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Yoga Medalist Brother Sisters Request to Help TN Govt about Future 19 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->