திருவாரூரில் இருந்து கொண்டு தேசவிரோத நடவடிக்கை.. தாவுத் கூட்டாளிகளுடன் லிங்க்.. தட்டிதூக்கிய என்.ஐ.ஏ.!! - Seithipunal
Seithipunal


தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகளுடன் சேர்ந்து தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்ட வழக்கில், மன்னார்குடியை சேர்ந்த இளைஞன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரியால் கைது செய்யப்பட்டுள்ளான். 

மதுரையை சேர்ந்த முகமது இக்பால் சமூக வலைதளம் மூலமாக தேசிய இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், பிற மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் முகமது இக்பாலுடன் தொடர்புடைய பாவா பக்ருதீன் என்ற மண்ணை பாவாவும் சமூக வலைதளம் மூலமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டது அம்பலமானது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து, இணைய வழியில் அவர்களை தொடர்பு கொண்டு தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மண்ணை பாவா செயல்பட்டதை உறுதி செய்தனர். 

இதன் தொடர்ச்சியாக மன்னார்குடியில் உள்ள ஆசாத் தெருவில் வசித்து வந்த மண்ணை பாவா என்ற பக்ருதீனை, பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவனது வீட்டிற்குள் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், அவனிடம் இருந்த மடிக்கணினி, பிரிண்டர் மற்றும் 30 புத்தகம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Mannargudi Mannai Bawa Ails Bakrudeen Arrested By NIA Did Activity Against Indian Nation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->