இறுதி வருட மாணவர்களுக்கு இணையம் வழியாக தேர்வுகள்.. பல்கலை. அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடர்பான கேள்விகள் எழுந்த நிலையில், பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு தேர்வுகளை நடத்தி முடிப்பதில் குறியாக இருக்கிறது.

ஆனால், கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா? என்ற கேள்விகளுக்கு தொடர்ந்து பல திருப்பங்கள் பதிலாக அமைகிறது. மேலும், இறுதி வருடம் பயின்று வரும் மாணவர்களை தவிர்த்து, பிற வருட மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த பல்கலை. பொறுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவாரூர் பல்கலை. தேர்வுகள் குறித்த தகவலானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக தேர்வுகளை நடத்தி கொள்ள துறை தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பல்கலை. நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur College announce Final Year Exam for last year students


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->