திருவண்ணாமலை : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.. 30 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் இயக்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் பேருந்து திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலை கடக்க திடீரென குறுக்கே வந்துள்ளார்.

 இதில் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க அரசு பேருந்து ஓட்டுனர் வலது பக்கம் திருப்பியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலை ஓரமுள்ள 10 அடி பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனைய‌டுத்து உடனடியாக பயணிகள் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvannamalai Govt bus accident 30 passengers injured


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->