உண்மை தெரியாமல் அபராதம் விதித்த காவல்துறை.. முதல்வரின் உத்தரவால் நெகிழ்ந்துபோன குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டை கிராமத்தை சார்ந்தவர் பாலசந்திரன் என்ற பாலாஜி. இவரிடம் இருந்து தலைக்கவசம் இன்றி ஊரடங்கு சமயத்தில் வாகனத்தை இயக்கி வந்ததாக, போக்குவரத்து காவல் துறையினர் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். 

இந்நிலையில், ஆட்டிசம் பாதிக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு மருந்தகத்தில் மருந்துகள் வாங்க அவசர கதியில் சென்ற தனக்கு காவல் அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர் என்று ட்விட்டரில் பதிவு செய்தார். இது தொடர்பான பதிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றுள்ளது. 

இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் ரூ.500 ஐ பாலாஜியிடம் ஒப்படைக்குமாறும், சிறுவனுக்கு தேவையான மருந்துகளை வாங்கி கொடுத்து பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு வாருங்கள் என்றும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். 

இதனையடுத்து, திருவள்ளுர் தாலுகா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான காவல் அதிகாரிகள் பாலாஜியின் வீட்டிற்கு நேரில் சென்று ரூ.500 பணத்தை வழங்கிய நிலையில், சிறுவனுக்கு மருந்துகளையும் வாங்கி கொடுத்தனர். இதனால் நெகிழ்ந்துபோன சிறுவனின் குடும்பத்தினர், தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறையினருக்கு பெரும் நன்றியை தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Balaji Thanks to TN Police and TN CM MK Stalin 16 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->