தேனி மாவட்டத்தில் கிராமங்கள் அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலைபரவல் வீரியம் எடுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. பல மாவட்டங்களில் கொரோனாவின் உச்சக்கட்டம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டத்தை பொறுத்த வரையில் கடந்த கொரோனா முதல் அலையில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா அதிகளவு உறுதியான பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது அலையில் தேனியில் உள்ள கிராம பகுதிகளில் அதிகளவிலான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பல கிராமப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான உதவியையும் செய்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni District Village Level Corona Spread on Second Wave 27 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->