தமிழகத்தின் சாபக்கேடாக மாறிக்கொண்டு இருக்கும் திமுக ஆட்சி! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சியின் முடிவில் திருவோரும் திருவடியும் தான் மிஞ்சும்!

கரூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நூறு காச நோயாளிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்த அண்ணாமலை பின்னர் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பாஜகவிற்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை "பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை ஒரு கண்டன அறிக்கை கூட முதல்வர் விடவில்லை. தமிழகத்தில் இவ்வளவு சம்பவங்கள் நடக்கிறது அமைதியாக இருங்கள், இல்லையென்றால் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படுவீர்கள். பயங்கரவாதிகளை விட மாட்டேன் என ஒரு முதலமைச்சர் சொன்னால் எவ்வாறு இருக்கும். ஆனால் அவர் வாயை திறக்கவே இல்லை. ஆனால் அறிக்கையை பாஜகவின் மீது எழுதுகிறார். 

பெட்ரோல் குண்டு வீசியது யார்? யாரை மதவாதிகள் என்று முதலமைச்சர் சொல்கிறார். இது விநோதமாகவும் விசித்திரமாகவும் உள்ளது. முதலமைச்சர் சில நேரங்களில் கும்பகர்ணனாக தூங்குகிறார்! அவரை எழுப்ப வேண்டிய கடமை பாஜகவிற்கு உள்ளது" என பதில் அளித்தார். 

எம்எல்ஏக்களுக்கு கமிஷன் வரவில்லை என சொல்கிறீர்கள். அவ்வாறு யாரேனும் உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா என கேள்வி செய்தியாளர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்து அண்ணாமலை " நான் எந்த எம்எல்ஏவையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. கமிஷன் வரவில்லை என்பதால் தான் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ ஒரு நிறுவனத்தை மிரட்டுகிறார். கமிஷன் வந்தால் அவர் ஏன் பொய் மிரட்டப் போகிறார். ஏன் போய் கட்டப்பஞ்சாயத்து செய்யப் போகிறார். எல்லாம் எம்எல்ஏக்களும் முடிவு செய்து விட்டனர். நமக்கு எதுவும் வரவில்லை, ஒப்பந்தமும் கிடைப்பதில்லை. லாரியை நிறுத்தி எம்எல்ஏக்கள் பணம் வாங்கும் நிகழ்வு மட்டும்தான் தமிழகத்தில் நிகழவில்லை. 

நாமக்கல்லைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொண்டர்களுக்கு கட்டளையிடுகிறார். மணல் கடத்தலை பிரித்து தந்துள்ளதாக பேசிய வீடியோ இணையத்தில் வந்துள்ளது. மாவட்டச் செயலாளர்களுக்கு நீங்கள் தான் மணல் எடுத்துப் போக வேண்டும் என உத்தரவிடுகிறார். தமிழகத்தை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் ஒன்றும் இல்லாமல் போகும். கடைசியில் கோவணம் மட்டுமே மிஞ்சும். 

2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் போது கோவணமும், திருவடியும்,ஜ திருவோடும், ஒரு சட்டையும், ஒரு துண்டு மட்டுமே மிஞ்சி இருக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்தையும் திமுக பிரிக்கிறது. தற்பொழுது உள்ள எம்எல்ஏ எம்பிக்கள் மணலை சுரண்டுவது, அடுத்து தண்ணீர், அடுத்து கனிம வளத்தை சுரண்டுவது எனச் சென்று கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தின் சாபக்கேடாக இந்த திமுக ஆட்சி மாறிக்கொண்டிருக்கிறது.

எம்எல்ஏக்கள் எல்லாம் போய் மிரட்டும் அளவுக்கு நான் பார்த்ததில்லை. ஆனால் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ போய் மிரட்டுகிறார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளார். திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஒருவரை மிரட்டுகிறார். பின்பு அவரும் தலைமறைவாகிறார். திமுகவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தலைமறைவாகவே உள்ளனர். தமிழகத்தில் மக்கள் பிரதிநிதிகள் வேட்டியை கட்டிக்கொண்டு சாலையில் வந்து மிரட்டுவது நான் எப்போதும் பார்க்கவில்லை இப்பொழுது பார்க்கிறேன்" என செய்தியாளர்களுக்கு பதில் அளித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The DMK regime is becoming the curse of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->