தமிழகத்தில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் யார் தெரியுமா?? - Seithipunal
Seithipunal


கடந்த 19 ஆம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி  நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 354 இடங்களில் அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலேயே திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திண்டுக்கல் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ப.வேலுச்சாமி 721776 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.கா வேட்பாளர் ஜோதி முத்து 201267 வாக்குகள் பெற்றுள்ளார். இந்தநிலையில் 500000-த்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ப.வேலுச்சாமி வெற்றி பெற்றார். 

இந்தநிலையில் தமிழகத்திலேயே சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார். திருமாவளவன் 5,00,229 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகளும், இளவரசன் (அ.ம.மு.க.) 62,308 வாக்குகளும் பெற்றனர்.

இறுதியில் திருமாவளவன் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The candidate who won the lowest margin in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->