தஞ்சாவூர்: ஆயுதப்படை பெண் அதிகாரி காவல் நிலையத்திலேயே பாலியல் பலாத்கார முயற்சி.. காவலர் கைது.! - Seithipunal
Seithipunal


பெண் காவல் அதிகாரியை பலாத்காரம் செய்ய முயன்ற ஆண் காவலர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருப்பவர் உமாமகேஸ்வரி. இங்கு உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு ஆய்வாளர்கள், காவல் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

இதே காவல் நிலையத்தில் திருவையாறு தாலுக்கா அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர், காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். கொரோனா நோய் காரணமாக அய்யம்பேட்டை காவல் நிலையத்தில், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஆயுதப்படை பெண் போலீசார் 3 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் 3 பேருக்கும் உணவு உள்ளிட்ட தேவையான பொருட்களை காவலர் முருகானந்தம் வாங்கி கொடுத்து வந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி இரவு அய்யம்பேட்டை காவல் நிலையம் மாடியில் மூன்று பெண் காவல்துறை அதிகாரிகளும் சாப்பிட்டுவிட்டு, அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். 

இதன்போது போதை இருந்த முருகானந்தம், தூங்கிக்கொண்டு இருந்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை வேலை இருப்பதாக அறையை விட்டு வெளியே வருமாறு அழைத்து, கையை பிடித்து இழுத்து கட்டி அணைத்து பலவந்தமாக பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவல் அதிகாரி முருகானந்தத்தின் பிடியிலிருந்து தப்பி ஓடிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தனது சக அதிகாரிகளிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக ஆயுதப்படை பெண் காவல் அதிகாரிகள், தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் இதுகுறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டிடம் புகார் அளித்துள்ளனர். 

இந்த விஷயம் குறித்து நடவடிக்கை எடுக்க அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உமாமகேஸ்வரிக்கு உத்தரவு பிறப்பிக்கவே, முருகானந்தம் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த நிலையில், தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள் தகவல் வெளியே தெரியாமல் இருந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்தால் தஞ்சை மாவட்ட காவல் துறையினருக்கு அவமானம் என்று உயர் அதிகாரிகள் வாயமொழி உத்தரவிட்டு விஷயத்தை வெளியே போகாமல் வைத்திருந்ததும் தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur Ayyampet Police Station Woman Officer Sexual Abuse Attempt by man Police


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->