அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர் - கொந்தளிக்கும் திமுக அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாடு பயணம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துக்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு தெரிவிக்கையில், "கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை ஆளுநர் முற்றிலும் அறியவில்லையோ? அல்லது அறிந்தும் அறியாமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

அகில இந்திய அளவில் வெளியிட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் உள்ள டாப் 100 பல்கலைக்கழகங்களில், 20 பல்கலை. தமிழ்நாட்டில் இருக்கக்கூடியவை; டாப் 100 கல்லூரிகளில், 30 தமிழ்நாட்டில் இருப்பவை.

எல்லா தரவரிசைகளிலும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் சூழலில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கக்கூடிய ஆளுநர் எப்படி இந்த உண்மைகளை மறைத்துவிட்டு பேசுகிறார் என தெரியவில்லை.

ஆளுநர் அண்மைக்காலமாக முழு அரசியல்வாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். சிதம்பரம் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் ஆளுநர் இப்படி பேசியிருப்பார் என கருதுகிறேன்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதேபோல், ஆளுநர் அரசியல்வாதி போன்றும், எதிர்கட்சிகள் போன்றும் பேசுவது வருந்தத்தக்கது என்று, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangam Thennarasu condemn to Governor Ravi june 6


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->