ஒரு வாரத்துக்கு முன்பே ஆளுநரிடம் கொடுத்தாச்சு.. எம்.எல்.ஏ வானதிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றதில்  இருந்து அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் 2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக அரசால் வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து உள்ளார். இந்த நிலையில் ஆர்.என் ரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், ஆளுநர் உரையை முழுமையாக சட்டப்பேரவை குறிப்பில் சேர்க்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

அவர் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் "அரசு சித்தாந்தத்தை புகழ் பாடக்கூடியவராக ஆளுநர் இருக்க முடியாது. கூப்பிட்டுவச்சி அசிங்கப்படுத்துறீர்களா..? நீங்கள் சொல்வதை தான் பேச வேண்டுமா..? இல்லை என்றால் ஆளுநரை அவமானப்படுத்துவீர்களா..?" என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார்.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு "ஆளுநருக்கான உரை தயாரிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி முதலமைச்சரின் ஒப்புதல் பெறப்பட்டு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை தமிழக ஆளுநர் கடந்த 7ம் தேதி ஏற்றுக் கொண்டார். ஆளுநர் உரையானது சட்டப்பேரவை கூடுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது. ஆளுநர் பேச வேண்டிய உரையை புதிதாக இன்று கொடுக்கவில்லை" என வானதியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thangam Thenarasu responds to BJP MLA Vanathi criticism


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->