தொடர் விடுமுறை.. தாம்பரம் - திருநெல்வேலி இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முக்கிய பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் காலதாமதம் போன்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை 4:15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதேபோல் மறு மார்க்கமாக திருநெல்வேலி இருந்து ஆகஸ்ட் 12ம் தேதி மாலை 5:50 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 4:10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயிலில் இருந்து 2 முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 9 படுக்கை வசதி பெட்டிகள், 5 பொது வகுப்பு பெட்டிகள் மற்றும் 2 மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thambaram to thirunelvaeli special train tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->