அறிவுரை கூற சென்ற கடையம் காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த துயரம்.! இந்து முன்னணி கொடியை வைத்து சர்ச்சை..!! உண்மை இதுதான்..!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன் மூதாட்டி மற்றும் இளைஞரை மிரட்டியதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. இந்த விடியோவின் உண்மை தன்மை குறித்து நமது செய்திபுனல் பத்திரிகை சார்பாக கடையம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டது. 

இதன்போது காவல் அதிகாரிகள் தரப்பில் கூறிய பதில், " செல்வராஜ் என்பவர் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளார். இதனை வருவாய் அதிகாரிகள் கண்டறிந்து வீட்டின் சுற்றுச்சுவரை இடிக்க செல்வராஜ் தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர். முதலில் தேதி கொடுத்த சூழலிலும் சுற்றுசுவரை இடிக்கவில்லை. பின்னர் ஒருவாரம் கால அவகாசம் கொடுத்ததும் சுவரை இடிக்கவில்லை. 

பின்னர், சுவற்றில் இந்துமுன்னணி கொடியை வைத்துவிட்டு சர்ச்சையை கிளம்பியதால், காவல் ஆய்வாளர் ரகுராஜன் நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து சுவரை கட்டியுள்ளீர்கள். நாளை வருவாய் அலுவலர்கள் சுவரை இடித்தால் கொடி உள்ளதால் வேறு பிரச்சனை வரும். தேவையில்லாத சர்ச்சைகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்து முன்னணி கொடியை வைப்பதற்கு முன்னதாகவே காவல் ஆய்வாளர் நேரில் சென்று சுவரை அகற்ற அறிவுறுத்தியுள்ளார். 

இப்படியாக கடந்த ஒரு மாதமாக கால அவகாசம் வழங்கியும், நேரில் சென்று அறிவுரை கூறியும் எந்த பலனும் இல்லை. மேலும், அவரது வீட்டிற்கு அருகே உள்ள சர்ச் தரப்பில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனையும் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சர்ச் இருக்கும் பகுதியில் ஜெ.சி.பி இயந்திரம் செல்ல வழியில்லை என்பதால், பஞ்சாயத்து ஊழியர்கள் மூலமாக சர்ச் ஆக்கிரமிப்பு நிலம் அகற்றப்பட்டு வருகிறது.

இந்த சர்ச்சையை வைத்து "சர்ச்" சுவரை மட்டும் விட்டுவிடுவார்கள், எங்களின் சுவரை இடிப்பார்களா? என சர்ச்சையை கிளப்பிய செல்வராஜ் தரப்பு, எனது சுவரை மட்டும் இடிக்க ஏன்? வருகிறீர்கள் என்று தகராறு செய்து, காவல் ஆய்வாளரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த வீடியோ பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக பல சர்ச்சை சம்பவங்கள் நிலவியதாகவும் வருவாய், வட்டாட்சியர் அதிகாரிகள், காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

மேலும், ஒரு மாத கால அவகாசம் கொடுத்து, தாங்களே முன்வந்து சுவற்றை அகற்றி கொடுங்கள் என்று தெரிவித்தும் பலனில்லாததால் இறுதியில் கடையம் காவல் ஆய்வாளர் ரகுராஜன் செல்வராஜின் வீட்டிற்கு நேரில் சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரில் உள்ள இந்து முன்னணி கொடியை அகற்றக்கூறி உத்தரவிட்டு இருக்கிறார். ஏற்கனவே பல அவகாசம் கொடுத்தும் அதனை கண்டுகொள்ளாத செல்வராஜ் தரப்பை காவல் அதிகாரி எச்சரித்துள்ளார். " இதுவே நடந்த உண்மையான சம்பவம் என காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

காவல் அதிகாரியின் அறிவுரையை கேட்காமல் அலட்சியமாக இருந்துவிட்டு, இறுதியில் காவல் அதிகாரி வந்து கண்டிப்பதை மட்டும் பதிவு செய்து வைத்த செல்வராஜ் தரப்பு ஒரேயொரு கொடியை வைத்து சர்ச்சையை கிளப்பி அதிகாரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது. அரசு நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், வீண் பிரச்சனை வேண்டாம், கொடியை மட்டும் அகற்றுங்கள் என கூற சென்ற காவல் அதிகாரிக்கு நேர்ந்த நிலையை எண்ணி சக காவலர்கள் பெரும் அதிர்ப்திக்கும் உள்ளாகி தங்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi Kadayam Police Station Inspector Ragunadhan Advice Turned Argument by Anti Socials


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->