தென்காசி மாவட்ட காவல்துறையின், "கொரோனா ஜாக்கிரதை".. வைரலாகும் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. 

இதில் 1749 பேர் பூரண நலன் பெற்று இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர். மேலும், 437 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலேயே மூன்றாவது பாதிக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறது. 

தமிழகத்தில் 1267 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் வேட்டி அவிழ்ந்துவிழ ஓடிய கலக்கல் வீடியோ காட்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வீடியோ பெரும் வைரலான நிலையில், தென்காசி மாவட்ட காவல் துறையினர் பதிவு செய்த கொரோனா ஜாக்கிரதை வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tenkasi district police video awareness about corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->