இரவு நேர டீக்கடை இருக்கா..? ஏன் இழுத்து மூடுறாங்க.. வியாபாரிகள் முன்வைக்கும் கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைவீதியில் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 20 டீக் கடைகளும், ரயில் நிலையம் செல்லும் சாலையில் 15 டீக் கடைகளும்உள்ளன.

இந்த கடைகள் அனைத்தும் இரவு 11 மணியுடன் நிறுத்தப்பட்டு பின்னர் அதிகாலை முதல் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி இரவு 11 மணிக்கு மேல் டீக் கடை வைக்கக் கூடாது என்றும் காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து டீக்கடை உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், இரவு நேர கடை வைத்திருக்கும் அனைவரும் ஏழைத்தொழிலாளர்கள், இரவு நேரங்களில் வாகங்கனங்களில் செல்வோர்களுக்கும், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் இரவு நேர டீக்கடை ஒரு உதவியாகவும், வாய்ப்பாகவும் இருக்கிறது.

இரவு நேர கடையை நிறுத்துவதன் மூலம் ஏழைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எனவே ஏழைத்தொழிலாளர்களின் நலன்கருதி இரவு 11 மணிக்கு மேல் டீக்கடை வைத்து நடத்த மாவட்டஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tea Kadai over night


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->