குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. மே1ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது.

இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும். 

அந்த வகையில், வரும் மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும், அனைத்து விதமான பார்களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

அன்றைய தினம் (மே 1ம் தேதி) மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மேலும், இதனை மீறி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac wineshop closed on May 1 in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->