டாஸ்மாக் கடைகளில் இந்த பாட்டில்களில் தான் மது விற்பனை செய்ய வேண்டும்-உயர் நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பிளாஸ்டிக் பாட்டில்கள் மாசை ஏற்படுத்தும் என்பதால் என்பதால் கண்ணாடி பாட்டில்களில் மது விற்கத்தடை விதிக்க  முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் என்பவர் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இதனை விசாரித்த நீதிபதி பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, கண்ணாடிகளை பயன்படுத்த கூடாது என உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்கும் போது, அவை மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மதுபான ஆலைகளுக்கே அனுப்புகின்றனர். கண்ணாடி பாட்டில்களால் எந்த வித சுற்றுச்சூழல் பாதிப்பும் இல்லை. மேலும், அதனை மறு சுழற்சி செய்ய முடியும்.

ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்த முடியாது. இது சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும். எனவே டாஸ்மாக் கடைகளில் மது விற்கத் தடை செய்ய முடியாது என வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac wines should sale in glass bottles


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->