மின் கட்டண உயர்வால் மாதம் ரூ.1,000 கோடி தான் வருவாய்..!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருத்தம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் பொதுமக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விலைவாசியும் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அரசியல் கட்சிகளும், சிறு குறு நிறுவன தொழிலாளர் கூட்டமைப்புகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. 

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி "தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகு மாத வருவாய் ரூ.1000 கோடி அதிகரித்துள்ளது. இருந்தாலும் திட்டமிட்டதை விட இது சற்று குறைவு தான். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். மின்கட்டண உயர்வு அறிவிப்பின் போது சில பிரிவுகளுக்கு மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக தற்பொழுது மின்வாரியத்திற்கு மாத வருவாய் ரூ.1,000 கோடியாக மட்டுமே உள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO revenue Rs1000Cr after increase electricity bill


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->