மின்சார பிரச்சனையை சரிசெய்ய வருபவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் - TANGEDCO அறிவுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்கள், மின் இணைப்பை கொடுக்கவும், மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள தடையை சரி செய்யவும் என பல்வேறு காரணங்களை கூறி பணம் வாங்கி வருவதாக பல்வேறு குற்றசாட்டுகள் இன்றளவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதிய மின் இணைப்பு கொடுக்க ரூ.10 ஆயிரம் இலஞ்சம் கேட்டு மின்வாரியத்துறை அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை. மின்தடையை சரி செய்ய வேறு பொருள்களை வாங்க பணம் கோரினால் தகவல் தெரிவிக்கவும். 24 மணி நேரமும் இயங்கும் 1912 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO Request to Peoples do not give money for TNEB Workers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->