உதயநிதியின் படத்திற்காக துணிந்த TANGEDCO..!! ஊழியர்களுக்கான வாழ்த்தில் கூட வாரிசு அரசியல்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் இரு பெரும் நடிகர்களான அஜித் மற்றும் விஜயின் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. துணிவு படத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. அதேபோன்று நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் வட தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தனது சொந்த தயாரிப்பில் துணிவு படத்தை வெளியிடுவதால் அதிகப்படியான தியேட்டர்கள் வாரிசு படத்திற்கு ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு நிலவி வருகிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அப்பொழுது நடிகர் விஜய் செல்பி வீடியோ ஒன்றை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவானது ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது. விஜய் ரசிகர்கள் நேற்றிலிருந்து #என்நெஞ்சில்குடியிருக்கும் மற்றும் #வாரிசு ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். 

இந்த நிலையில் மின்சார துறை ஊழியர்கள் பேரிடர் காலங்களில் பணி புரிந்ததற்காக தமிழக மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான TANGEDCOவில் வாழ்த்து ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வாழ்த்து புகைப்படத்தில் துணிவு பணத்தின் லோகோ இடம் பெற்றிருந்தது. மேலும் "மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தடையின்றி சீரான மின்சாரம் வழங்கிட தன் உயிரை பணயம் வைத்து பாடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

பல கோடி ரூபாய் செலவு செய்து வாரிசு இசையில் வெளியீட்டு விழாவை நடத்தி ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருந்த வாரிசை ஒரே ட்விட் மூலம் காலி செய்துள்ளது டான்ஜெட்கோ. இந்த பதிவை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று அரசு நிறுவனத்தை தனது சொந்த தேவைக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் (குறிப்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி) பயன்படுத்துவதாக இணையதள வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தற்பொழுது இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO post greetings message with Thunivu logo in twitter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->