ரூ.397 கோடி மெகா ஊழல் புகார்.. 10 ஆண்டுகளாக இதே நடைமுறை தான்.. மின்சார வாரியம் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சாரத் துறையில் நடைபெற்ற ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி அளவிலான மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 

மேலும் அனைத்து டெண்டர்களும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தே காசி என்பவரால் முடிவு செய்யப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி இருந்தது. இந்த நிலையில் மின்சாரவாரியம் மூலம் நடைபெறும் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி,

1) கடந்த 2011ம் ஆண்டு முதல் 26 நிறுவனங்கள் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்து வருகிறது.

2) மின்சார வாரியம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாதிரியான நடைமுறைகளை தான் பின்பற்றி வருகிறது.

3) மற்ற மாநிலங்களில் உபயோகிக்கப்படும் டிரான்ஸ்பார்மர்களின் அலுமினிய சுழல் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் உபயோகிக்கப்படுகிறது.

4) தமிழ்நாட்டில் காப்பர் சுழல் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் உபயோகிக்கப்படுவதால் மற்ற மாநிலங்களை விட விலை கூடுதலாக உள்ளது.

5) மற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்படும் அலுமினியம் சுழல் கொண்ட டிரான்ஸ்பார்மர்களின் உத்திரவாத காலம் 3 ஆண்டுகள் மட்டும்தான்.

6) தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய கூடிய டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு 5 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

7) ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தும் கால அவகாசம் ஓராண்டு வரை வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் உடனடியாக பணம் வழங்கப்படுகிறது. 

8) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் ஒரே நிறுவனமாக இயங்குவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளைக் கொண்டு செல்ல வேண்டி உள்ளதால் அதற்குண்டான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.

9) தமிழ்நாடு மின்வாரிய கொள்முதலில் உள்ள விலை கொள்முதல் செய்யும் காலத்திற்கு ஏற்ப திருத்தம் செய்யப்படவில்லை. ஒப்பீடு செய்யப்பட்ட  மின்வாரிய தொழில்நுட்ப குறிப்புகளை விட தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப குறிப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

10) புகாரில் தெரிவித்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே விலை நிர்ணயத்தாலும் அந்த நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்து அந்த நிறுவனங்கள் வழங்கிய விலை புள்ளியை விட 50 ஆயிரம் ரூபாய் வரை குறைத்து கொள்முதல் செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்சார வாரியத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO clarification on transformer scam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->