வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. கண்ணீர் மல்க காப்பாற்ற கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் தன்னை சித்திரவதை செய்வதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புவனா (வயது 37) இவருக்கு கொரோனோ காலகட்டத்தில் ரூ.4 லட்சம் வரை கடன் ஏற்பட்ட நிலையில், கடன் கொடுத்தவர்கள் பலரும் இவரை தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஜான்சன் என்பவர் குவைத் நாட்டில் குழந்தையை பராமரிக்கும் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து புவனாவும் குழந்தை பராமரிப்பு வேலை என நம்பி கடந்த பிப்ரவரி மாதம் குவைத் சென்றுள்ளார். ஆனால், அங்கு வேலைக்கு சென்ற சில நாட்களிலேயே தனது குடும்பத்தினருக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்து வருவதாகவும் அங்கு 20 மணி நேரம் வேலை வாங்குவதாகவும் அடித்து அவமானப்படுத்தி கழிவறையில் தங்க வைத்து சித்திரவதை படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அவரது கணவர் ஜேம்ஸ் பால் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளார். எய்ம்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி கனியா பாபு மூலம் தூதரகத்தை தொடர்பு கொண்டுள்ளார். அதில் புவனா தப்பி வந்து தூதரகத்தை சேர்ந்தால் மற்றதை தாங்கள் பார்த்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புவனாவிடம் கூறியதற்கு தற்போது தான் தங்கி வேலை செய்து வரும் வீடு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவரின் மீது எனவும் அங்கிருந்து தப்பித்தால் தன் மீது திருட்டுப்பழி சுமத்தி திருட்டு வழக்கு போடுவார்கள் எனவும் புவனா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அவரது மகள் தனது தாயை எப்படியாவது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu women trapped in Kuwait


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->