சென்னை 'மக்களே உஷார்': மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று, நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் விதி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று மற்றும் நாளை தேனி, திண்டுக்கல், மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

07.01.2024 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 22-23 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தேனி மாவட்ட பகுதிகளில் 7 சென்டிமீட்டர் மழையும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்காக எச்சரிக்கை:



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain update 04012024


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->