தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நாளை மறுநாள், நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகின்ற 07.01.2024 ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21-22 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் 2 சென்டிமீட்டர் மழையும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu rain update 03012024


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->