தமிழ்மொழி புறக்கணிப்பு விஷயம் - சிபிஐ (எம்) கண்டனம்..! - Seithipunal
Seithipunal


தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பான விசயத்திற்கு சிபிஐ (எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சி.பி.ஐ.எம் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் வகையிலும், மாநில அரசின் கல்வி உரிமைகளை பறித்து, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் முறையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கைத் திட்டத்தை வரைவு அறிக்கையின் போதே கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இப்போராட்டங்களுக்கு எல்லாம் செவி மடுக்காத மத்திய பாஜக அரசு தற்போது தேசிய கல்விக் கொள்கையை 17 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே தமிழ்மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கீடு, தேசிய தேர்வுகளில் புறக்கணிப்பு என தொடர்ந்து தமிழ் மொழிக்கு விரோதமான போக்கையை மத்திய பாஜக அரசு கடைபிடித்து வரும் சூழலில், தேசிய கல்விக் கொள்கையை தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யாதது தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கும் செயலாகும்.

22வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகாவும், செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPIM Condemn about Central Govt Educational Policy Tamil Language Negotiation 25 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->