#Breaking: திமுக கூட்டணியில் சி.பி.ஐ-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு..! - Seithipunal
Seithipunal


இந்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடவுள்ள கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. திமுக கூட்டணியில் உள்ள இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணியில், சி.பி.ஐ-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் குழு நடத்திய பேச்சுவார்த்தையில், 6 இடங்களில் போட்டியிட பேசி முடிக்கப்பட்டு, கூட்டணி தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

இந்திய மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக திருத்துறைப்பூண்டி, பவானி சாகர், தளி, சிவகங்கை, அறந்தாங்கி, புதுக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி ஆகிய தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CPI DMK Alliance Confirmed 5 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->