சிக்கலில் தமிழக மாவட்டங்கள்.. பதறும் மருத்துவ வல்லுநர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று ஒருநாளில் 20,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,28,064 ஆக உயர்ந்துள்ளது. 18,016 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 10,90,338 ஆக உயர்ந்துள்ளது. இன்று 153 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 14,468 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இன்று 6,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,52,260 ஆக உயர்ந்துள்ளது. இதனைப்போன்று, தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

அதிகபட்சமாக செங்கல்பட்டில் 1618 பேருக்கும், கோயம்புத்தூரில் 1566 பேருக்கும், ஈரோட்டில் 652 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 835 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 444 பேருக்கும், மதுரையில் 477 பேருக்கும், ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், சேலத்தில் 607 பேருக்கும், திருவள்ளூரில் 1207 பேருக்கும், தூத்துக்குடியில் 707 பேருக்கும், திருநெல்வேலியில் 403 பேருக்கும், திருப்பூரில் 477 பேருக்கும், திருச்சியில் 653 பேருக்கும், விழுப்புரத்தில் 396 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய கொரோனா பரவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இப்படியே தமிழகத்தின் நிலை சென்றால் வரும் நாட்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பிற மாநிலங்களில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை கூட ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona Outbreak Most District Affected hardly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->