பள்ளிகள் - கல்லூரிகள் திறப்பு தள்ளிபோகிறதா?... தமிழக முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பான நிலை திரும்பும் தருணம் அதிகரித்து வந்தது. 

ஆனால், தற்போது மேலை நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவ துவங்கிய நிலையில், விதிக்கப்ட்ட தளர்வுகளை மீண்டும் கடுமையாக்கி ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,31,942 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,04,031 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 11,244 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்திக்கையில் பேசினார். இதன்போது, " பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையின் பேரிலேயே பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

ஏற்கனவே பல மாதங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மூடியுள்ளது என்றும், இணையத்தளம் வாயிலாக பாடம் நடத்தப்பட்டாலும் அவர்களுக்கு சந்தேகம் மற்றும் புரிந்துகொள்ள முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசின் கவனத்தில் வந்தது. 

கொரோனா குறைத்துக்கொண்டு இருப்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இதன் பேரிலேயே பள்ளிகளை திறக்க அறிவிப்பு வெளியிட்டோம். ஆனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்று கூறுவதால், அதனையும் கவனத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Press meet about School Opening 5 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->