என்ன செய்தாலும், கல்லறை தான் இறுதியானது - தமிழக முதல்வர் உருக்கமான பேச்சு.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடிசியா மைதானத்தில் கிருஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். 

இதன்போது தமிழக முதல்வர் பேசுகையில், " சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் ஒரே இயக்கம் அதிமுக தான். இந்திய அளவிலும், தமிழக அளவிலும் அதிமுக கட்சி மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து வருகிறது. கிருஸ்துவ மக்கள் எந்த விதமான அச்சமும் கொள்ள வேண்டும். கூட்டணிகள் மாறலாம் ஆனால், கொள்கை என்றுமே மாறாது. 

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கை வழியில், எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிறந்துள்ள கிறிஸ்துவ மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரவர் மதம் அவர்களுக்கு முக்கியம். அனைத்து மதத்திற்குரிய கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. 

நாங்கள் இந்து, கிறிஸ்துவம், முஸ்லீம் என அணைத்து மத தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் அவர்களின் தெய்வங்களை வணங்குகிறார்கள். இதில் கருத்து கூறுவது தவறானது. எவ்வுளவு தான் வாழ்ந்தாலும், கல்லறை என்பது தான் இறுதியானது. கல்லறை கேட்டு வைக்கப்பட்டுள்ள உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edappadi Palanisamy Feeling Speech at Codissia Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->