பத்திரிகையாளரின் வாயடைக்க வைத்த தமிழக முதல்வர்.. திருவாரூரில் மாஸ் பிரெஸ் மீட்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக முதல்வர் பரப்பராக பேசியிருந்தார். 

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, " திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் துத்தநாக தொழிற்சாலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை, மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன், நிலக்கரிப்படுகை தொழிற்சாலை, இரும்புத்தாது எக்கு ஆளை, செம்பு மற்றும் அலுமினியம் எக்கு ஆளை, தோல் பதனிடும் தொழிற்சாலைகள் துவங்கப்பட அனுமதி கிடையாது. 

நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரும் மத்திய அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கடந்த மாதம் 8 ஆம் தேதியே நான் பிரதமருக்கும், மத்திய சுகாதாரத்துறையினருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். காவேரி டெல்டா நிலங்களில் மக்கள் வீட்டுமனைகள் கேட்கின்றனர். அனைவரும் வாழ்வதற்கு வீடுகள் தேவை. அனைவரும் நகரத்திற்கு அருகேயே வாழ ஆசைப்படுகின்றனர். 

விவசாய நிலங்கள் அதிகளவு வீட்டு மனைகளாக கையகப்படுத்தவில்லை. பத்திரிகையாளர்கள் சார்பாக கூட வீட்டுமனைகள் கேட்கப்பட்டது. நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் காட்டிற்குள்ளா? வீட்டு மனைகள் வழங்க முடியும். தேர்தல் கூட்டணி விஷயம்  இப்போது தேவையில்லாதது. மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் மட்டுமே சேலம் மக்களுக்கு விநியோகம் செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழக முதல்வரிடம் கேள்வியுடன் பதிலையும் சேர்த்து பத்திரிகையாளர் எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர், நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் உள்ளது என்று கூறியது பெரும் வைரலாகி வருகிறது. இதனைப்போன்று திருவாரூரில் விவசாய தொழிற்சாலை துவங்குவதாக முதல்வர் அறிவித்ததற்கு சிலர் மட்டுமே கைதட்டிய நிலையில், விவசாய தொழிற்சாலைக்கு கைத்தட்டு இவ்வுளவுதானா? என்ற கேள்வியையும் புன்னகையுடன் முன்வைத்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Chief Minister Edappadi Palanisamy Press Meet Thiruvarur 28 Aug 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->