மாணவி ஸ்ருதிக்கு, தமிழிசை செய்த பாராட்டுக்குரிய செயல்.. மகிழ்ச்சியில் மாணவியின் குடும்பத்தார்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 156 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டு உள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் சில தினங்கள் முன்பு வெளியானது.  அதன்படி தேர்வு எழுதிய மாணவர்களில், தேசிய அளவில் 56.50% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் 701 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் முதல் இடத்தை  பிடித்துள்ளார். டெல்லி, உத்தரபிரதேசம் மாணவர்கள் இரண்டு, மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களின் 48.57%  மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 31.56%  பேர்தான் தேர்ச்சி அடைந்த நிலையில், தற்போது தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முதல் இடத்தை பிடித்த ஸ்ருதி இந்திய அளவில் 57 வது இடத்தை பிடித்துள்ளார் 720 மதிப்பெண்ணுக்கு 685 மதிப்பெண் எடுத்துள்ளார்.

மாணவி ஸ்ருதி மருத்துவ கல்லூரி கட்டணம் செலவை ஏற்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இதை தொடர்ந்து  ஏழை தையல் தொழிலாளர் மகளின் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இன்று காலை மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று மாணவிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார். மேலும் முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி உள்ளார். இதற்கு மாணவி ஸ்ருதியும், தமிழிசை சவுந்தரராஜனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai meet jeevitha


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->