இன்று தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இயல்பான அளவை விட மழை குறைவாக பெற்றுள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு குறைவாகவே உள்ளது. 

தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்த போது வட மாவட்டங்களில் போதுமான அளவு மழை பொழியவில்லை. 

வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்து வருகிறது. 

இதன் காரணமாக தமிழகத்தில் 27 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று, நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஒரு சில இடங்களில் லேசான மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu today Orange warning10 districts


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->