தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு? அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்! - Seithipunal
Seithipunal


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 6169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த ஜிகா வைரஸ் பாதிப்பும் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. இதனால் தமிழக-கர்நாடகா எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ''டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 6169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 598 பேர் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஜிகா வைரஸ் பரவுமா என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் 22 நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. உடல் வலி, சிவப்பு தடிப்புகள், காய்ச்சல், தலைவலி, போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை பாதிப்புடனும் அல்லது சிறிய தலையுடனும் பிறக்க வாய்ப்புள்ளது. 

அதே சமயம் இந்த காய்ச்சலை மருந்து, மாத்திரைகள் மூலம் 2 முதல் 7 நாட்களுக்குள் குணப்படுத்தலாம். கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ள ஜிகா வைரஸை பரப்பும் 64 ஏடிஸ் கொசுக்களை பரிசோதித்ததில் எல்லை மாவட்டங்களில் வைரஸ் பரப்பும் தன்மை இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை'' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu in Zika virus Minister Subramanian information


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->