தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 22 ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். அதில் இரண்டு விசைப்படகுகளில் சென்ற 6 பேர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். 

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்களை இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து ஆறு மீனவர்களையும் விடுதலை செய்யவும் மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கியும் நீதிபதி உத்தரவிட்டார். 

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு சில நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu fishermen Release 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->