வனத்துறையினருக்கு போக்குகாட்டும் T23 புலி., மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோட்டம்..!! - Seithipunal
Seithipunal


T23 ஆட்கொல்லி புலி  மீது மயக்க ஊசி செலுத்தியும் வனதுறையினரிடம் இருந்து தப்பியோடியது.

நீலகிரி மாவட்டம், மசினகுடி பகுதிகளில் மனிதர்களை கொன்ற ஆட்கொல்லி புலியை பிடிக்க பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து ஆட்கொல்லி T23 புலியை பிடிக்கும் பணிகள் தீவிர படுத்தபட்டன.

20நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றிரவு மசினகுடி- முதுமலை சாலையில் அந்த புலி உலவி வருவதாக வனதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 இதனை அடுத்து, அங்கு விரைந்து சென்ற வனதுறையினர் புலி மீது மயக்க ஊசி செலுத்தினர் ஆனால் புலி மயங்கி விழாமல் காட்டிற்குள் தப்பி சென்றுள்ளனர். புலி தப்பி சென்ற நிலையில் இரவு 2 மணி வரை தேடுதல் பணியில் வனதுறையினர் ஈடுப்பட்டனர். ஆனால் புலியை கண்டறிய முடியவில்லை.

மயக்க நிலையில் தப்பி சென்ற புலியை கும்கி யானையின் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வனதுறையினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். புலி விரைவில் பிடிப்படும் என வனதுறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T23 tiger escaped after being injected with anesthetic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->