சென்னையில் ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.! - Seithipunal
Seithipunal


வாரந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை நிறுத்தம்! புதிய விதிமுறைகள் அறிமுகம்! போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்!

சென்னையில் ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ போன்ற உணவு எடுத்துச் செல்லும் வேலைகளில் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலையை செய்து வருகின்றனர். ஸ்விக்கி அதன் ஊழியர்களுக்கு எத்தனை பார்சல் வழங்குகிறதோ  அதற்கேற்றார் போல் வாரம் தோறும் ஊக்குத்தகையானது வழங்கப்படுகிறது.

தற்பொழுது ஸ்விக்கி நிறுவனம் புதிய அட்டவணையை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் தினமும் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் ஊக்கத்தொகை என்பது கிடையாது எனவும் அறிவித்துள்ளது.

வாரம்தோறும் ரூ.14,500 கிடைத்த வந்த நிலையில் 16 மணி நேர வேலையில் ரூ.12000 கூட கிடைப்பதில்லை. எங்களுக்கு பெட்ரோல் செலவு, உணவுச் செலவு மற்றும் வாகன செலவு போக வாரம் ரூ7000 மட்டுமே கிடைக்கிறது. புதிய விதிகளின்படி எவ்வளவு நேரம் வேலை பார்த்தாலும் குறிப்பிட்ட அளவு சம்பளம் மட்டுமே கிடைக்கிறது.

இந்நிலையில், பழைய நடைமுறையை ஸ்விக்கி நிறுவனம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி அருகே ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் இன்று இரவு பல்வேறு தரப்பினருக்கு தேவையான உணவு வீடு தேடி வழங்கும் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy company employees are on strike in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->